Categories: சினிமா

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்..வாடகை தாய் மூலமா? என நெட்டிசன்கள் கிண்டல்

வெளியிட்டது

பிண்ணனி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து இரட்டையர்கள் பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல பிண்ணனி பாடகியாக இருப்பவர் சின்மயி. பிண்ணனி மட்டுமல்லாது டப்பிங் பேசுவதிலும் திறமையானவர், தமன்னா, சமந்தா போன்றவர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களை ஈர்த்தார். இவரின் முதல் பாடலே ஆஸ்கர் நாயகன் ஏர்.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான். முதல் பாடலே வேறு லெவலில் ஹிட் அடிக்க, பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் வைரமுத்து இதை மறுத்தார். வீடியோ கீழே உள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்..வாடகை தாய் மூலமா? என நெட்டிசன்கள் கிண்டல் 1

இதனால் சின்மயி தரப்புக்கும், வைரமுத்து இடையே சண்டை நீடித்து வந்து கொண்டே இருந்தது. மீ டூ என்ற வார்த்தையும் பிரபலமானது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாகவும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார். மேலும் பெண்கள் குறித்து குற்றச்சாட்டுகள், அல்லது அவதூறு செய்திகள் வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார்.

Screen Grab: Chinmayi Twitter Account

 

சமீபத்தில் 37 வயதில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு டாக்டர் கூற அவரை வறுத்து எடுத்துவிட்டார் சின்மயி. சின்மயிக்கும் நடிகர் ராகுல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஆண்டுகள் ஆன பின்பும் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் சின்மயியை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர்.

ஆனால் தற்போது சின்மயிக்கு எட்டு ஆண்டுகள் கழித்து இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சின்மயி. டிரிப்டா மற்றும் சர்வாஸ் இருவரும் என்னுடைய புதிய உலகம் என்று குழந்தைகள் தன்னுடைய கையை பிடித்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தன்னிடம் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் புகைப்படங்களை பகிர்ந்து இருப்பதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தன்னிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் தான் அவரு பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Tamil Mithran

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்