படமா இது? உயிரை வாங்கிட்டானுங்க.! தேவையில்லாத லக்கேஜ்.! டைரி படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை

நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் தான் அருள் நிதியின் டைரி. இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எஸ் கதிரேசன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனரான இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கிறார். இவர் கோப்ரா படத்தில் கதாசிரியராக பணியாற்றி வந்தார். இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன் மூவிஸ் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் ட்ரைலரை உலக நாயகன் கமலஹாசன், நடிகர் விக்ரம் மற்றும் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஆகியோர் வெளியிட்டு இருந்தனர். திரில்லர் மற்றும் க்ரைம் ஜேனரில் உருவாகி இருந்த இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாகவே கருத்து கூறினர். பலரும் எதிர்பாராத பல சிற்பங்கள் இருந்ததாக கருத்து கூறினர் ஆனால் ப்ளூ சட்டை மாறன் தற்போது வழக்கம் போல இந்த படத்தையும் நன்றாக இல்லை என்ற விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படமா இது? உயிரை வாங்கிட்டானுங்க.! தேவையில்லாத லக்கேஜ்.! டைரி படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை 1

விளம்பரம்

ஊட்டி மலைப்பாதையில் 13வது ஹேர் பின் பெண்டில் எப்போதும் விபத்து நடக்கிறது. மேலும் சென்னையில் எஸ் ஐ பயிற்சி முடித்தவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது அது ஆவணக்காப்பகத்தில் இருந்து ஏதாவது ஒரு கேசை எடுத்து விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்போது எஸ்.ஐ பயிற்சி முடித்த அருள்நிதி ஒரு வழக்கை கண்ணை மூடிக்கொண்டு எடுக்கிறார். அந்த கேஸ் 16 வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் தம்பதிகள் இருவரை கொலை செய்த வழக்கு ஆகும். இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக சென்னையிலிருந்து அருள்நிதி ஊட்டிக்கு வருகிறார். இந்த விசாரணை தொடங்கிய போது அவருக்கு பல மர்மங்களுக்கு விடை தெரிகிறது. இந்த வழக்கை கண்டுபிடித்தாரா இல்லையா? அதில் என்ன என்ன திருப்பங்கள் இருந்தது என்பது தான் படத்தின் மீதி கதை. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.

தொடர்புடையவை  தமிழ் மக்கள் காட்டும் அன்பு.! மணிரத்தினத்தை கட்டிபிடித்து நன்றி சொன்ன ஐஸ்வர்யா ராய்.!

படமா இது? உயிரை வாங்கிட்டானுங்க.! தேவையில்லாத லக்கேஜ்.! டைரி படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை 3

விளம்பரம்

அவர் கூறும் பொழுது சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த அருள்நிதிக்கு அங்கு ஒரு போலீஸ் அதிகாரியுடன் காதல் ஏற்படுகிறது, இவர்கள் வழக்கை முன்னேற்றுவார்கள் என்று பார்த்தால் அந்த வழக்கின் பைல்களை தூக்கிக்கொண்டு இவர்கள் காதலை தான் முன்னேற்றிக் கொண்டிருந்தார்கள், அந்த சமயத்தில் ஹீரோவின் ஃபைல் துப்பாக்கி அடங்கிய ஒரு வண்டி காணாமல் போய்விட்டது, அந்த வண்டியை திருடியவனை தேடி அலைகிறார்கள். அந்த திருடன் கோயம்புத்தூருக்கு செல்லும் ஒரு பேருந்தில் ஏறி சென்று கொண்டிருக்கிறான். அந்தப் பேருந்தில் ஹீரோ ஏறி விடுகிறார். அந்தப் பேருந்தில் ஒரு பத்து பேர் இருக்கிறார்கள் அந்த 10 பேருக்கு ஒரு பத்து கதையை கூறுகிறார்கள், இந்த பத்து பேரின் கதையில், எது படத்துடைய கதை என்று கண்டுபிடிப்பதற்கு நேரம் சரியாக இருந்தது இறுதிவரை படத்தின் கதை என்ன என்றே தெரியவில்லை என்று அவர் கடுமையாக விமர்சித்தார். ஓவர் டீடைல் செய்து உயிரை வாங்கி விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடையவை  'சைரன்' படத்திலிருந்து வெளியான HD புகைப்படங்கள்..!

படமா இது? உயிரை வாங்கிட்டானுங்க.! தேவையில்லாத லக்கேஜ்.! டைரி படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை 5

விளம்பரம்

திரைக்கதை இல்லாமல் ஜவ்வு மிட்டாய் போல் இழுத்தடித்து விட்டார்கள் என்றும் கதைக்கு சம்மந்தம் இல்லாத கதைகளை திணித்து படத்தின் கதையை கோட்டைவிட்டார்கள் என்று ப்ளூ சட்டை கூறினார். படத்தின் கடைசி 15 நிமிடத்தில் தான் படத்தின் கதையை கூறுகிறார்கள், படத்திற்கு தேவையான கதையை கொஞ்சமாகவும், படத்திற்கு தேவையே இல்லாத கதையை நிறையவும் வைத்து ஒரு வேஸ்ட் லக்கேஜ் ஆக இந்த படம் இருக்கிறதாக ப்ளூ சட்டை விமர்சித்தார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண…Watch the video below..

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Tamil Talikes

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment