வைரமுத்து தன்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினார் என்று மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் பிண்ணனி பாடகி சின்மயி. தமிழ் திரைப்படத்தின் பிரபல பிண்ணனி பாடகியாக இருப்பவர் சின்மயி. தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களை ஈர்த்தார். இவரின் முதல் பாடலே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான். முதல் பாடலே வேறு லெவலில் ஹிட் அடிக்க, பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் வைரமுத்து இதை மறுத்தார். இதனால் சின்மயி தரப்புக்கும், வைரமுத்து இடையே சண்டை நீடித்து வந்து கொண்டே இருந்தது. மீ டூ என்ற வார்த்தையும் பிரபலமானது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாகவும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் பின்னணி பாடுவது மட்டுமில்லாமல் டப்பிங் துறையிலும் இயங்கி வந்தார் சின்மயி. பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியிருக்கிறார். வைரமுத்து பிரச்சனைக்கு பிறகு இவரை டப்பிங் இண்டஸ்ட்ரியிலிருந்து நீக்கி அதன் தலைவர் ராதாரவி உத்தரவிட்டிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணம் சின்மயி சரியாக சந்தா கட்டாத காரணத்தால் டப்பிங் உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்குவதாக அவர் அறிவித்திருந்தார். இதனால் பெண்களுக்கு எதிராக எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதை வைரமுத்து மற்றும் ராதாரவி உடன் இணைத்து சின்மயி எப்பொழுதும் பேசி வருகிறார். சமீபத்தில் கூட இருவரையும் தெருநாய்களுடன் ஒப்பிட்டு அவர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். சமீபத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது அதில் ஒன்று பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் அந்த குழந்தைகளின் பெயரையும் அறிவித்திருந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருந்த அவர், தான் கச்சேரி ஒன்றிற்காக கனடா சென்றபோது தன்னிடம் வைரமுத்து எவ்வாறு நடந்து கொண்டார் என்று விளக்கி இருக்கிறார். தனது தாயார் கீழே அமர்ந்து ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, மேல் மாடிக்கு அறைக்கு தன்னை அழைத்து, அவர் தமக்கை எவ்வாறு உடல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இந்த தகவல் வெளியான போது தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னை சிதைத்து விடுவேன் என்றும் பேசியிருந்தார், மேலும் தன்னை லாரி ஏற்றி கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம் மிரட்டல் வந்தாகவும், அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை, நான் தமிழ் பெண், எனக்கு அந்த திமிர் எப்போதும் இருக்கும் என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..
YouTube Video Code Embed Credits: AvalGlitz