நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை பார்த்து இருக்கீங்களா? அட இந்த சீரியல் நடிகரா?

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தான் கோபிநாத். இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா ஷோ இன்றுவரை பிரபலமாக இருக்கிறது. எதிரும் புதிருமாக இருக்கும் இரு தரப்பினரை அழைத்து அவர்களிடம் கேள்வி கேட்டு இரு தரப்பினரையும் கருத்தையும் பெற்று மிக நேர்த்தியாக ஒரு நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். இவர் தனியார் வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் வேலைக்காக வந்தார். ஆங்கிலம் அவ்வளவு கலக்காமல் தூய தமிழில் உரை நிகழ்த்தும் ஆற்றல் படைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் கோபிநாத் ஒருவராக இருக்கிறார்.
நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை பார்த்து இருக்கீங்களா? அட இந்த சீரியல் நடிகரா? 1
விஜய் டிவி துவங்கப்பட்ட போது, அதில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டது. அதில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். முன்பாக அவர் பல தொலைக்காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார். அவருக்கு திருப்புமுனையாக இருந்த ஒரு நிகழ்ச்சி என்றால் குற்றம் நடந்தது என்ன நிகழ்ச்சி தான். இதில் ஒரு குற்றம் நடந்து விட்டால் அதை புலனாய்வு செய்து அந்த குற்றத்தின் உண்மை தன்மையை கண்டுபிடிப்பது போன்ற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் பெரிதும் அறியப்பட்டார். மேலும் இவர் ஐந்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, நேர் நேர் தேமா போன்ற ஐந்து புத்தகங்கள் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.
நீயா நானா கோபிநாத்தின் நிஜ அண்ணனை பார்த்து இருக்கீங்களா? அட இந்த சீரியல் நடிகரா? 3
தற்போது கோபிநாத்தின் சகோதரர் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது வேறு யாருமில்லை விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வரும் பிரபாகரன் தான், இவர் நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலணி போன்ற சீரியல்களில் நடித்து வரும் பிரபாகரன்  தான். கோபிநாத்தும் அவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment