“இவரெல்லாம் ஒரு தலைவரு…இவரு என்ன ஒதுக்குறாரு…”!! தமன்னாவை பற்றி சர்ச்சை கருத்து பேசிய ராதாரவி!! கேவலப்படுத்திய சின்மயி”

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், டப்பிங் சங்க தலைவருமான நடிகர் ராதா ரவி சில தினங்கள் முன்பு நடிகை தமன்னாவை பற்றி பேசிய கருத்து மிகவும் வைரலானது. அதற்கு பல கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுதன. இப்போதை அதனை குறித்து பிரபல பின்னணி பாடகி சினமயி கருத்து தெரிவித்துள்ளார்.

"இவரெல்லாம் ஒரு தலைவரு...இவரு என்ன ஒதுக்குறாரு..."!! தமன்னாவை பற்றி சர்ச்சை கருத்து பேசிய ராதாரவி!! கேவலப்படுத்திய சின்மயி" 1

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில்  சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் லீட் ரோலில் நடித்திருக்கும் நாயகி காவ்யா, நடிகர் ராதாவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி தெரிவித்தார். நல்ல கதை மற்றும் கேரக்டர் என தெரிந்ததால் நடித்ததாக கூறிய அவர், கனல் படம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “நான் ஒரு முறை நடிகை தமன்னாவை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அப்போது என்னடா இது இவளோ வெள்ளைய இருகாங்க..எங்கயாவது கொஞ்சூண்டு கருப்பு இருங்கதனு பார்த்தேன் ஆனா கொஞ்சம் கூட கருப்பே இல்ல…அதே போல நாயகி காவ்யாவும்” என பேசினார். இந்த கருத்தை கேட்ட அங்கிருட்ணஹா சிலரும் கூட கொஞ்சந ஆடி போனாலும் அதனை வெளிக்காட்டாமல் அமைதி காத்தனர்.

சமூகவலைத்தளங்கில் மிகவும் வைரலான இந்த பேச்சிற்கு நிறைய பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்பொது பாடகி சின்மயி இது குறித்து கருதது தெரிவித்துள்ளார். அதில் “என்ன டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்த தலைவர் இவர் தான்” என்று பதிவிட்டுள்ளார். சின்மயி வைரமுத்துவிற்கு அடுத்தபடியாக ராதாரவியை தான் அடிக்கடி விமர்சித்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டே இவருக்கு டப்பிங் பேச தடை விதித்தது தமிழக டப்பிங் சங்கம்.

சங்கத்திற்கான சந்தாவை அவர் காட்டவில்லை என காரணம் கூறி அவர் விளக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் #MeToo  பற்றி போது வெளியில் பகிரங்கமாக பதிவு செய்து கவிஞர் வைரமுத்து மற்றும் டத்தோ ராதாரவி குறித்து கருத்து குறியாமையாலே அவர் அந்த சங்கத்தில் இருந்து விளக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்