“பத்தல பத்தல”!! “Aandavar Swag”!!முழு வீடியோ பாடல் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ள படக்குழு!!

"பத்தல பத்தல"!! "Aandavar Swag"!!முழு வீடியோ பாடல் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ள படக்குழு!! 1

தமிழில் முன்னணி நாயகனான கமல்ஹாசன் நீண்ட நாட்களாக ஒரு மிக பெரிய வெற்றி படத்திற்காக காத்திருந்தார். குறிப்பாக கமர்சியல் நாயகனாக இவரை இந்த ஜெனெரேஷன் பார்க்கவில்லை. அந்த ஒரு விஷயத்தை “விக்ரம்” படத்தில் சரியாக கொடுத்து மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்துள்ளனர். குறிப்பாக கமலின் சினிமா வாழ்க்கையில் இது தான் மிக பெரிய வசூல் செய்த படம்.

விளம்பரம்

"பத்தல பத்தல"!! "Aandavar Swag"!!முழு வீடியோ பாடல் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ள படக்குழு!! 3

இந்த படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சில ஆண்டுகள் முன்பு தெலுங்கிலும் மிக பெரிய ஆளுமையாக இருந்த கமல், நடுவில் சில படங்களின் தோல்வியால் துவண்டு போயிருந்தார். ஆனால் இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி கேரளாவில் வெளியான ஒரு தமிழ் படத்தின் அதிகபட்ச வசூலை குவித்துள்ளது. நீண்ட காலமாக விஜயின் கோட்டையாக இருந்த கேரளாவிலும் இந்த படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒரு மாத காலம் நெருங்கும் வேளையில் கிட்டத்தட்ட 410 கோடிக்கும் மேல் வசூல் எடுத்துள்ளது படம்

விளம்பரம்
தொடர்புடையவை  பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

"பத்தல பத்தல"!! "Aandavar Swag"!!முழு வீடியோ பாடல் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ள படக்குழு!! 5

வெளியாகி ஒரு மாத காலம் நெருங்கும் நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்டுள்ளது. வருகிற ஜூலை 8ஆம் தேதி படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப படவுள்ளது. இந்த படம் வெளியான பொது எழுந்த மிக பெரிய சர்ச்சை பத்தல பத்தல பாடல் வரிகளே. அதில் “ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே” என்ற வரிகள் வரும். இந்த வரிகளுக்கு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் எழுந்து, படத்திலிருந்து இது ஒளிபரப்படாமல் ,முழுவதுமாக நீக்கப்பட்டது.

விளம்பரம்

"பத்தல பத்தல"!! "Aandavar Swag"!!முழு வீடியோ பாடல் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ள படக்குழு!! 7

இப்பொது இந்த பாடலின் முழு விடீயோவின் அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்படவுள்ளது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இன்று ஜூலை 1 ஆம் தேத்தி மாலை 6 மணிக்கு மொத்த பாடலும் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment