
தமிழில் முன்னணி நாயகனான கமல்ஹாசன் நீண்ட நாட்களாக ஒரு மிக பெரிய வெற்றி படத்திற்காக காத்திருந்தார். குறிப்பாக கமர்சியல் நாயகனாக இவரை இந்த ஜெனெரேஷன் பார்க்கவில்லை. அந்த ஒரு விஷயத்தை “விக்ரம்” படத்தில் சரியாக கொடுத்து மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்துள்ள இந்த படம் வெளியாகியாகிய இரண்டே வாரங்களில் 200 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கமலின் சினிமா வாழ்க்கையில் இது தான் மிக பெரிய வசூல் செய்த படம்.
இந்த படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சில ஆண்டுகள் முன்பு தெலுங்கிலும் மிக பெரிய ஆளுமையாக இருந்த கமல், நடுவில் சில படங்களின் தோல்வியால் துவண்டு போயிருந்தார். ஆனால் இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி கேரளாவில் வெளியான ஒரு தமிழ் படத்தின் அதிகபட்ச வசூலை குவித்துள்ளது. நீண்ட காலமாக விஜயின் கோட்டையாக இருந்த கேரளாவிலும் இந்த படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த படத்தை அண்மையில் பார்த்துள்ள டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட்டின் பைஜான் சல்மான் கான் இருவரும் நேற்று நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து விருந்தளித்து பாராட்டியுள்ளனர். படத்தை பார்த்து மே சிலிர்த்து போன இருவரும், நேரிலேயே கமலையும், லோகேஷையும் பாராட்டியுள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “லூசிபர்” என்ற படத்தில் இணைந்து நடித்துவரும் சல்மானும், சிரஞ்சீவியும் அந்த படப்பிடிப்பின் நடுவில் கமலை சந்தித்து வாழ்த்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது படத்தின் ரீமேக் குறித்து ஏதேனும் பேசப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. சல்மான் மற்றும் சிரஞ்சீவி இருவருமே மற்ற மொழிகளில் வெற்றி பெரும் படங்களை தங்கள் மொழிகளில் ரீமேக் செய்து நடித்துவருவதாலும், இந்த சந்திப்பில் அது குறித்து பேசப்பட்டிற்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கில் டப் ஆகி வெளியான “விக்ரம்” படம், இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து இப்பொது வரை 25 கோடிக்கு மேல் வசூல் செய்த்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த படம் தென்னிந்தியாவில் அண்மையில் வெளியான மிக பெரிய வெற்றி படமாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் முதல் இடத்திற்கு இந்த படம் வேகமாக நகர்ந்து வருகிறது.