தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் மிக சிறந்த நடிப்பகராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ் மட்டுமின்றி உலகளவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆசியாவின் மிக பெரிய சினிமா நட்சத்திரமாக இவர் விளங்குகிறார். பலரும் யூகிக்க முடியாத சாதனையை இவர் தமிழ் திரையுலகில் நிகழ்த்தியுள்ளார். இவருடைய முத்து படம் மட்டும் கொரியா, சீனா நாடுகளில் வெளியாகி 500 நாட்கள் மேல் ஓடி மிக பெரிய சாதனையை நிகழ்த்தியது. அன்று முதலே ஆசிய அளவில் உற்று நோக்கும் நடிகராக ரஜினி விளங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளிலும் இவருடைய படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு இருப்பது நாம் அனைவர்க்கும் தெரியும். 70 வயதை கடந்தும் இன்றும் ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். இவருடைய திரையுலக வழக்கியில் மற்றொரு அறிய சாதனை இவருக்கு இப்பொது நிகழ்ந்துள்ளது.

மார்வெல் திரைப்படங்களுக்கு உலகில் அறிமுகம் தேவையில்லை. அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், தோர், ஹல்க் என பல சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சூப்பர் ஹீரோக்கள் கொண்ட இந்த கதையை அடிப்படையாக கொண்டு பல சர்வதேச வெற்றி படங்களை கொடுத்துள்ளது. குறிப்பாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் உலகளவில் அதிகமாக வசூலித்த 2வது படமாக உள்ளது. படங்கள், காமிக்ஸ் கதைகள், வெப் சீரிஸ் என பல வடிவிலும் இவர்கள் தொடர்ந்து பல அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது.
இப்பொது அந்த வரிசையில் புதிய வெப் தொடரான ’Ms Marvel’ டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஒரு பாக்கிஸ்தானிய – அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறும் பயணத்தை இந்த தொடர் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மார்வெல் சினிமா வரலாற்றிலேயே ‘Ms Marvel’ தான் முதல் பெண் தெற்காசிய மற்றும் முஸ்லீம் சூப்பர் ஹீரோ ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆறு எபிசொடுகளை இந்த தொடர் கொண்டுள்ளது.

இந்த தொடரின் முதல் எபிசோடின் முடிவில் பாடல் ஒன்று வருகிறது. அதுவே ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரஜினியின் ரசிகர்களையும், தமிழ் சினிமா ரசிகர்களையும். காரில் உட்கார்ந்து இருந்து இருக்கும் நாயகி ரேடியோவை ஓடவிட்டு அதில் நடிகர் ரஜினியின் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த “லிங்கா” படத்தில் ஒப்பனிங் சாங்காக வரும் “ஓ நண்பா” என்ற பாடல் ஓடுகிறது. இந்த விஷயத்தை ரசிகர்கள் பாலரும் கொண்டாடி வருகிறார்கள்.

மார்வெல் சினிமாவில் இந்த தொடரில் தான் முதன்முதலாக முஸ்லிம் பெண் இமான் வெள்ளனி என்பவர் கமலா கான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் இந்த தொடரில் மோகன் கபூர், நிம்ரா புச்சா, அராமிஸ் நைட், சாகர் ஷேக், ரிஷ் ஷா, ஜெனோபியா ஷ்ராஃப், மாட் லின்ட்ஸ், யாஸ்மீன் பிளெட்சர், லைத் நக்லி, அசார் உஸ்மான் மற்றும் டிராவினா ஸ்பிரிங்கர் உள்ளிட்ட ஆசிய மற்றும் அமெரிக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதோடு இதில் பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Video Courtesy – Anontaku