நடிகர் விக்ரம் தற்போது தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிய தயாரிப்பாளரின் சிகிச்சைக்கு உதவி செய்திருக்கும் தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வரும் நடிகர்தான் விக்ரம். ஒரு படத்திற்கு தேவை என்றால் உடலை மெருகேற்றுவதும், இல்லை என்றால் உடலை மிக இளைப்பதுமாக கமலஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒரு கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல வருடங்களாக திரையில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது அவர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிய தயாரிப்பாளர் ஒருவருக்கு தற்போது சிகிச்சைக்காக விக்ரம் பணம் கொடுத்திருக்கும் செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விக்ரமுக்கு திருப்புனையாக அமைந்த இரண்டு படங்கள் என்று சொன்னால் அது பிதாமகன் மற்றும் சேதுதான். இந்த இரண்டு படங்களையும் தயாரித்திருந்தவர் வி.ஏ துரை. பிதாமகன் ரிலீஸ் ஆகும் சமயத்தில் விக்ரமுக்கு 25 லட்ச ரூபாயை சம்பளம் தராமல் துரை ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது. நீண்ட வருடமாக அந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வி.ஏ துரை பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறா.ர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதை கேள்விப்பட்ட விக்ரம் தற்போது அவருக்கு பண உதவி செய்து இருக்கிறார்.
சர்க்கரை நோய் வந்து காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் துரைக்கு செயற்கை கால் பொருத்த பணம் இல்லாமல் தவித்து வந்திருக்கிறார். இது குறித்து கேள்விப்பட்ட விக்ரம் தற்போது அவருக்கு உதவி செய்திருக்கிறார். தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிய தயாரிப்பாளருக்கு கூட பழைய பகையை மறந்து விக்ரம் உதவி செய்திருக்கிறார். அவர் செய்த இந்த உதவிக்காக கண்கலங்கி நன்றி கூறி இருக்கிறார் வி.ஏ. துரை. அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் விக்ரமின் இந்த நல்ல குணத்திற்காக அவரை பாராட்டியும் வருகின்றனர். இந்த தகவலை துரையே ஒரு தனியார் பேட்டியின் போது குறிப்பிட்டு இருக்கிறார்..!