Categories: சினிமா

வீடு பணிப் பெண் மகன் திருமணத்தை மட்டும் இல்ல.! இதெல்லாம் கூட சீயான்தான் பண்ணி இருக்காரு.!

வெளியிட்டது

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் எந்த ஒரு பின் புலமும் இல்லாமல் சினிமா துறையில் நுழைந்து தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோப்ரா. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் பத்து கெட்டப்புகளுக்கு மேல் போட்டு நடிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகர் விக்ரம்.

வீடு பணிப் பெண் மகன் திருமணத்தை மட்டும் இல்ல.! இதெல்லாம் கூட சீயான்தான் பண்ணி இருக்காரு.! 1

இவர் ஹாலிவுட் படங்களில் வரும் நடிகர்களுக்கு இணையாக தன் உடலை மாற்றுவதில் வல்லமை கொண்டவர். அதற்கு சிறந்த ஒரு படம்தான் ஐ. இந்த படத்தில் தன்னுடைய உருவத்தையே மாற்றி மிகச் சிறப்பாக நடித்திருப்பார் விக்ரம். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் இருக்கிறார் விக்ரம். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு ஒன்றும் நடந்திருக்கிறது.

அதாவது தனது வீட்டில் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் மேரி என்பவரின் மகனின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்திருந்தார் விக்ரம். மேரியின் மகன் தீபக் மற்றும் வர்ஷினியின் திருமணம் திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சர்ப்ரைஸ் ஆக பட்டு வேஷ்டி சட்டையில் வருகை தந்திருந்தார் விக்ரம்.

மேலும் திருமணத்தை தானே தலைமையேற்று தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்திருந்தார். மேலும் மேரி தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது தானும், தன் அண்ணன், அண்ணி என அனைவரும் விக்ரம் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருவதாக கூறினார். அதில் தனது அண்ணன் இறந்து விட்டதாகவும் தானும் அண்ணியும் மட்டுமே வேலை பார்த்து வருவதாக கூறினார்.

மேலும் பெசன்ட் நகரில் வீடு வாங்குவதெல்லாம் பெரிய கனவு. ஆனால் விக்ரம் சாரும் மேடமும் எங்களுக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்கள் என்று மேரி கூறினார். மேலும் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்று யாரையும் எளிதாக நினைக்க மாட்டார். இறந்த தன் அண்ணனின் பிள்ளைகளை அவர்தான் படிக்க வைத்தார் என்றும் மேரி கூறினார். மேலும் தனது மகனின் திருமணத்திற்கான மொத்த செலவையும் அவரை ஏற்றுக் கொண்டு, நேரில் வந்து திருமணத்தை செய்து வைத்ததார். இது அந்த கடவுளே எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தது போல் இருப்பதாக மேரி எமோஷனலாக பேசினார். மேலும் மாலையில் நீலாங்கரையில் வைத்து நடந்த திருமண வரவேற்பிற்கு விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும், விக்ரமின் மனைவியும் வந்து வாழ்த்தியிருந்தார்கள். அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கணும் என்று மேரி பேசியிருந்தார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்