அண்ணாச்சியின் குடும்ப புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? Rare Pics of லெஜெண்ட் சரவணன்

திரைத்துறையில் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே 12 கோடி வரை வசூலை அள்ளியவர் தி லெஜென்ட் சரவணன் அண்ணாச்சி. சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே பலருக்கும் அறிமுகமே தேவையில்லை. தி நகர் என்று சொன்னவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் தான். அந்த சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணன் அருளின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 1973 ஆம் ஆண்டு தி நகர் பகுதியில் ஒரு சிறிய பாத்திரக்கடையாக ஆரம்பிக்கப்பட்டது தான் சரவணா ஸ்டோர்ஸ். பின்னாளில் இதன் உரிமையாளர்களின் கடுமையான உழைப்பால் சிறிது சிறிதாக விரிவாக்கி இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்குகிறது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் தொடங்கி துணி, தங்கம், நகைகள் என அனைத்தும் கிடைக்கும் ஒரு இடமாக அது இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அண்ணாச்சியின் குடும்ப புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? Rare Pics of லெஜெண்ட் சரவணன் 1

விளம்பரம்

தனது கடை விளம்பரங்களில் பல கோடி செலவு செய்து மாடலிங் துறையில் இருப்பவர்களையோ நடிகர் நடிகர்களையோ ஏன் நடிக்க வைக்கும் என்ற எண்ணம் பல தொழில் அதிபர்களுக்கும் உண்டு. பலரும் தங்கள் கடை விளம்பரங்களில் தானே தோன்றி நடிப்பார்கள். வசந்த் அண்ட் கோ உரிமையாளரான வசந்தகுமார், லலிதா ஜுவல்லரி உரிமையாளரான கிரன் போன்றவர்கள் இது போல் நடித்துள்ளனர். அதே பாணியை பின்பற்றி தனது கடை விளம்பரங்களில் நடித்த தொடங்கியவர் தான் சரவணன் அருள். பின்னர் இவருக்கு சினிமா ஆசை வந்துவிட தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் தி லெஜென்ட் என்ற படத்தை எடுத்து அதில் ஹீரோவாக அவரே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பல கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், படம் இரண்டு வாரம் முழுமையாக ஓடி 12.5 கோடி வசூலை பெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தொடர்புடையவை  ஆஸ்திரேலியாவில் விடுமுறையை கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்திரா..!

அண்ணாச்சியின் குடும்ப புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? Rare Pics of லெஜெண்ட் சரவணன் 3

விளம்பரம்

இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க சரவணன் அருள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நல்ல கதை அம்சத்துடன் கூடிய படங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்று அவர் ஏற்கனவே தனது பேட்டிகளில் கூறி வந்தார். இந்த நிலையில் அவரைப் பற்றி அறிய நிறைய பேர் முற்பட்டு வருகின்றனர். அவருடைய குடும்பம் அவருடைய வீடு பற்றி அறிய பலரும் ஆர்வம் கொள்கின்றனர். சமீபத்தில் திருநெல்வேலியில் அவர் கட்டியிருந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோவை பல லட்சம் மக்கள் பார்த்திருந்தனர். தற்போது அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Veerargal

விளம்பரம்

Leave a Comment