Categories: சினிமா

உலக நாயகன் கமலை ஓரங்கட்டிய சீயான்.. யப்பா எத்தன கெட்டப்.. வேற லெவல் ட்ரைலர்

வெளியிட்டது

சீயான் நடித்துள்ள கோப்ரா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் என்பவர் தயாரித்து வரும் படம்தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கேஜிஎஃப் பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஷூட்டிங் தொடங்கப்பட்டது. சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வந்தது. இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. கீழே உள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்.

உலக நாயகன் கமலை ஓரங்கட்டிய சீயான்.. யப்பா எத்தன கெட்டப்.. வேற லெவல் ட்ரைலர் 1

இதனால் படத்திற்க்கான ப்ரோமஷன் வேலைகளை செய்து வருகின்றனர் படக்குழு. சமீபத்தில் கூட விக்ரம் திருச்சி ஜோசப் கல்லூரிக்கு வந்து ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கி வைத்தார். அதற்க்கு முன்பே ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வந்தனர் படக்குழு. ஏற்கனவே வெளியான தும்பி துள்ளல் மற்றும் ஆதிரா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேக்பை பெற்று இருந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது கோப்ரா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது. அந்த ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.. Watch Cobra Trailer Below..

Youtube Video Code Embed Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்