இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் காபி வித் காதல். இந்த படத்தில் அடுத்த பாடலான யுவன் குரலில் நாளைய பொழுது என்ற லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிப்பில் உருவான கலகலப்பு 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன் பிறகு இவர்கள் மூவரும் இணைந்து உருவாகியுள்ள படம் தான் காபி வித் காதல். இதன் சூட்டிங் அனைத்தும் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சுந்தர் சி யின் மனைவி குஷ்புவின் அவனி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்ற மூன்று ஹீரோக்களும், ஐஸ்வர்யா தத்தா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று கதாநாயகிகளும் இணைந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல் யோகி பாபு, ரெட்டிங் கிங்ஸ்லி, விஜய் டிவி பிரபலம் டிடி போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக எகிறி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ரம்பம்பம் என்ற பாடலும், தியாகி பாய்ஸ் என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தியாகி பாய்ஸ் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி பாடியிருந்தார். காதல் தோல்வி பாடலை கூட ஒரு ராப் பாட்டு போல மாற்றி இருந்தார் யுவன் சங்கர் ராஜா. இந்த இரண்டு பாடல்களும் பலரின் ஃபேவரைட் ஆக மாறி உள்ள நிலையில், தற்போது மூன்றாவது ஆக ஒரு பாடலின் வீடியோ வெளியாகியிருக்கிறது.
நாளைய பொழுது என்ற லிரிக் வீடியோவை யுவன் சங்கர் ராஜா தனது youtube இல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வெளியான சில நிமிடங்களிலேயே பலர் இந்த பாடலை கேட்டுள்ளனர். நீங்களும் அந்த பாடலைக் பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: U1 Records.