சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் யாத்திசை படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக பாஸிட்டிவ் விமர்சனங்களை கூறியிருக்கிறார். பாண்டியர்களுக்கு எதிராக சேர மன்னர்களும் சோழ மன்னர்களும் இணைந்து போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாண்டிய நாட்டில் வாழும் எயினர் என்கிற பழங்குடியினரின் தலைவனாக இருக்கும் கொதி என்பவன் பாண்டிய மன்னன் ரணதீரனுக்கு எதிராக போர் தொடுக்கிறான் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றியது யார்? என்கிற ஒரு வரலாற்று புனைவு கதை. மேலும் இந்த படத்தில் பாசிட்டிவ்வாக மக்கள் பேசும் மொழி, அவர்கள் செய்த போர் முறைகள், அவர்களின் உடைகள் பழக்க வழக்கங்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை அழகாக காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், திரையில் சில இடங்களில் இது பொருட்செலவினால் கம்மியாக எடுக்கப்பட்ட படம் என்பது தெரிய ஆரம்பித்து விட்டது. அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் படத்தை எடுத்திருக்கிறார்கள். மேலும் படைகள், போர்கள் போன்ற காட்சிகளில் கூட்டத்தை வைத்து எடுப்பது மிகப் பெரிய பொருட்செலவை உண்டாக்கும். இதனால் சில காம்ப்ரமைஸ் செய்திருக்கின்றனர். அதனால் படத்துடன் ஒன்றிப் போய் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. மேலும் படத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய மொழியை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் சப் டைட்டிலை பார்த்து தான் படத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. தமிழ் படத்திற்கு முதல்முறையாக சப்டைட்டில் போட்டது இவர்களாகத்தான் இருக்கும். இதனால் கதையையும் சப்டைட்டிலும் மாறி மாறி பார்த்ததால் படத்தை சரியாக பார்க்க முடியவில்லை.

இந்தப் படத்தில் ஹீரோ வில்லன் என்றெல்லாம் கிடையாது, அதனால் யாரை ஃபாலோ செய்வது என்று தெரியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக பாண்டிய மன்னனை சுற்றி வளைத்து அட்டாக் செய்து கொண்டிருப்பார்கள், அந்த காட்சி முடிந்த பின்பு தான் அவன் பாண்டிய மன்னன் என்பதே பலருக்கும் தெரிய வருகிறது. இப்படித்தான் பாண்டிய மன்னனை அறிமுகம் செய்திருக்கிறார்கள். நிறைய நிறைகளும் சில குறைகளும் இருந்தபோதிலும் நன்றாக ஆராய்ச்சி செய்து இந்த படத்தை எழுத்திருப்பதற்காக பாராட்டுக்கள். பொன்னியின் செல்வன் என்று ஒரு படம் வந்தது, அதில் என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்?? ஒன்றுமே இல்லாமல் மேடை நாடகம் போல இருந்தது. வாரவாரம் மொக்கை படங்கள் வருகிறது. அதை பார்ப்பதற்கு இந்த படத்தை ஒரு முறையாவது பார்த்து விடுங்கள் என்று அவர் தனது விமர்சனத்தை கூறியிருந்தார். நீங்களும் அவரை அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies