தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார். இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் இவர், இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நடிகை அமலாபால் அவரிடம் விவாகரத்து பெற்றார். தற்போது இவர் தனது தோழன் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் தற்போது பிறந்து உள்ளது.

இன்று ஓணம் பண்டிகையை நடிகை அமலாபால் குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். இவர் மகனின் முகத்தை ரசிகர்களுக்கு முதல்முறையாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அமலாபால் மகன் அவரை போல இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.