Categories: அரசியல்

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!!

வெளியிட்டது
ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!! 1

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இன்று காலை சுமார் 8 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, முன்னணி நிலவரம் தெரிய வந்தது 78 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும் பாஜக கூட்டணி 25 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்