Categories: அரசியல்

சத்தியாகிரகத்தை துவங்கும் காங்கிரஸ்

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையில் சத்தியாகிரகம் நடத்த திட்டமிட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்காலில் காவலத்துறையின் அடக்குமுறையால் மங்களூர், டெல்லி, உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் கலவரம் வெடித்துள்ளது.

சத்தியாகிரகத்தை துவங்கும் காங்கிரஸ் 1
சோனியா காந்தி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் போராட்ட களத்தில் இல்லையென பல விமர்சனங்கள் எழுந்தது. இதனையே சுட்டிக்காட்டி ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விழித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, சத்தியாகிரகம் நடத்த திட்டமிட்டுள்ளது. “ராஜ்கட் பகுதியில் உள்ள காந்தி சமாதியிலிருந்து திங்கட்கிழமை மதியம் சத்தியாகிரகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகிம்சை வழிக்கு ஏற்ப, தேசத்தின் தந்தை காட்டிய நிலையான மற்றும் தெளிவான எதிர்ப்பின் அடிப்படையில், காங்கிரசின் சத்தியாக்கிரகம் இந்த சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக போராடி அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதுகாக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளரான கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியாகிரகத்தில், காங்கிரசின் முத்த தலைவரான சோனியா காந்தி, உட்பட அனைவரும் கலந்துகொள்கின்றனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்