கொலை மிரட்டல் விடும் மர்ம நபர்! பீதியில் கௌதம் கம்பீர்!!

கொலை மிரட்டல் விடும் மர்ம நபர்! பீதியில் கௌதம் கம்பீர்!! 1

கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரராக இருந்தார். ஆனால் தற்போது பாஜவில் சேர்ந்தார். இதையடுத்து, மக்களவை தேர்தலின்போது, கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் அவருக்கு பாஜக சார்பில் தொகுதி வழங்கப்பட்டது. இதில் அவர் வெற்றி பெற்ற நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் தமக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, சதாரா துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து அவர் புகார் அளித்தார். அந்த மனுவில், வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வருவதாகவும், அதில் கொலை மிரட்டல்கள் விடுப்பதாகவும் கூறியுள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment