Categories: சினிமா

நடிகர் சதிஷ் நடிக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது.!

வெளியிட்டது

காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சதீஷ் தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கத்தில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்கிற படத்தில் நடித்த முடித்துள்ளார். செல்வின் ராஜ் சேவியர், இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். இந்த படம் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமாக உருவாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சதிஷ் நடிக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது.! 1
இந்தப் படத்தில் சதீஷ் உடன் இணைந்து நடிகர் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா, விடிவி கணேஷ், ரெடின் க்ங்ஸ்லி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சென்னையில் மிகப் பெரிய அளவில் பொருட்செலவில் பழங்காலம் போன்ற அரங்குகள் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர் என வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியிருக்கிறது.


படம் குறித்து பேசிய இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை இந்த படம் கொடுப்பதோடு, நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் ரசிக்கும் வகையில் நகைச்சுவை, திகில் மற்றும் பேண்டஸி கலந்த படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். அனைத்து வயதினரையும் நிச்சயமாக இந்த படம் கவரும்” என்று கூறி இருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Movie Buff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்