‘பிரதர்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது திருமண நாளை கொண்டாடியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் அழகிய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் சரண்யா பொன்வண்ணனுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். முதல் படமே கமலஹாசன் உடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் குறுகிய காலம் மட்டுமே இவரால் ஹீரோயினாக நடிக்க முடிந்தது. பின்னர் நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் மீது காதல் வயப்பட்ட 1995ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அவர், தனது பிள்ளைகள் வளர்ந்த பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார் , ஹீரோக்களின் அம்மா வேடங்களை ஏற்கத் தொடங்கினார்.

அம்மா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எம் மகன், ராம், தவமாய் தவமிருந்து, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஐபி போன்ற பல படங்களில் நடித்தார். இதில் விஐபி படத்திற்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.

தற்போது ஜெயம் ரவி நடித்துவரும் ‘பிரதர்’ என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த வருகிறார். எம் ராஜேஷ் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜ் போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது 29வது திருமண நாளை ‘பிரதர்’ படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை சரண்யா பொன்வண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். பலரும் சரண்யாவிற்கும் பொன்வண்ணனுக்கும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.