“நான் பாத்ததுலயே படு கேவலமான படம் இதுதான்” கிக் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.!

நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் கிக். இந்த திரைப்படம் குறித்து தற்போது திரைவிமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம், தன்யா ஹோப், ராகினி திவேதி, பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் தான் கிக். இந்த திரைப்படம் குறித்து திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறும் பொழுது, ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் ஒரு விளம்பரம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி ஏற்படுகிறது. அப்போது ஹீரோ ஒரு பெரிய வேலையை பார்த்து விடுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் பாத்ததுலயே படு கேவலமான படம் இதுதான்" கிக் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! 1

விளம்பரம்

இந்த ஆண்டின் மிக மோசமான படம் என்கிற விருதை இந்த படத்திற்கு கொடுக்கலாம். அந்த அளவிற்கு படம் டஃப் கொடுக்கும். கதை, திரைக்கதை, நடிப்பு, கதாபாத்திர வடிவமைப்பு என எதுவுமே இல்லாத ஒரு படமாக இது இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் கூட மனதில் நிற்கவில்லை. தம்பி ராமையாவை தவிர, ஏனென்றால் அவர் தான் அதிக அளவில் எரிச்சலூட்டினார். படத்தில் உட்கார முடியவில்லை. தியான மண்டபம் போல அமைதியாக இருக்கிறது. படம் விட்டு இறங்கும் பொழுது ட்ரெயினை விட்டு இறங்கி வந்தது போல் இருக்கிறது. படம் முழுவதும் கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று கலரை அள்ளிக் கொட்டி இருக்கிறார்கள் அதனால் கலர் மூஞ்சியில் அடிக்கிறது.

தொடர்புடையவை  ரஜினிக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ள தமிழக அரசு!!நேரில் சென்று வாழ்த்து கூறிய நடிகர் சங்க உறுப்பினர்கள்.

"நான் பாத்ததுலயே படு கேவலமான படம் இதுதான்" கிக் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.! 3
இந்த படத்தை கண்ணைக் கொண்டு பார்க்க முடியவில்லை, காதைக் கொண்டு கேட்க முடியவில்லை. நான் சொல்வதை நம்பாமல் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்வேன் என்று நீங்கள் விரும்பினால் “பாருங்கள், பார்த்துத் தொலையுங்கள்” என்று சொல்லி தனது விமர்சனத்தை முடித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment