தமிழ் தொலைக்காட்சிகளிலேயே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்தளவுக்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூடிக்கொண்டு தான் உள்ளனர். இது தான் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை நான்கு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.
மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சிறிய வீடியோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த வீடியோ இன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION