விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார் எனலாம். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு திருப்பு முனையாக இருந்த நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகி உள்ளார்.

தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சமைத்து அசத்தி வருகிறார். இப்படி ஓய்வில்லாமல் சுற்றி சுற்றி விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் பிரியங்கா முதல் முறையாக தனது குழந்தை குறித்து பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இவர் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், விஜய்டிவியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் அல்லது ஸ்டார்ட் மியூசிக்கா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, தனக்கு அங்கீகாரம் அளித்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனவும், ஸ்டார்ட் மியூசிக் தனக்கு குழந்தை போன்றும் அதனை வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறி உள்ளார்.