வசூலில் முரட்டு அடி வாங்கிய இந்தியன் 2..! திக்குமுக்காடி நிற்கும் சங்கர்..!உச்சகடுப்பில் தயாரிப்பு நிறுவனம்..!

இயக்கத்தின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது சங்கர் தான். அந்த அளவுக்கு தனது பிரம்மாண்ட இயக்கத்தால் ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் எதையாவது பிரம்மாண்டமாக செய்து ரசிகர்களை கவருவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார் சங்கர். இந்நிலையில் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார் சங்கர்.

வசூலில் முரட்டு அடி வாங்கிய இந்தியன் 2..! திக்குமுக்காடி நிற்கும் சங்கர்..!உச்சகடுப்பில் தயாரிப்பு நிறுவனம்..! 1

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ஜெகன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதனால் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்று என படங்களை வெளியிட திட்டமிட்டு உள்ளார் சங்கர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை

வசூலில் முரட்டு அடி வாங்கிய இந்தியன் 2..! திக்குமுக்காடி நிற்கும் சங்கர்..!உச்சகடுப்பில் தயாரிப்பு நிறுவனம்..! 3

விளம்பரம்

இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இதனால் படத்தின் 11 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கி வெளியிட்டும் ரசிகர்கள் படத்தினை விரும்பவில்லை. இதனால் படத்தின் வசூல் பலத்த அடியை சந்தித்தது. தற்போதுவரை இப்படம் உலகளவில் ரூ.146 கோடியை வசூல் செய்து உள்ளதாகவும், இது மிகவும் குறைவான வசூல் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment