விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை வெகுவாக இந்த நிகழ்ச்சி கவர்ந்து உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எந்த நிகழ்ச்சியும் இத்தகைய வரவேற்பினை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி.. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார்.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இடையே சமையல் போட்டி நடத்தப்பட்டு, அதிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என அறிவித்து இருந்தார். அதன்படி இந்த வாரம் யாரும் எதிர்பாராத அளவு போட்டியாளர் பூஜா வெளியேறி உள்ளார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து நன்றாக சமைத்து வந்த பூஜா வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து உள்ளது.