குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஆண், பெண், குழந்தைகள் என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு நிகழ்ச்சி முடியப் போகிறதே என்று பார்க்கும் அனைவரையும் வருத்தப்பட வைத்த ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்று உள்ளது என்றால் அது குக் வித் கோமாளிதான். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

சுட்டித்தனங்கள் நிறைந்த உதவியாளரை கோமாளி என்ற பெயரில் வைத்துக் கொண்டு குக்குகள் சமையல் செய்யும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பல பேருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு Stress Buster ஆக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது இரண்டு சீசன்களை முடித்து மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மனோ பாலா, கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, பாரதி கண்ணம்மா ரோஷ்ணி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, அந்தோணி தாசன், வித்யூலேகா ராமன், ஸ்ருதிகா என 10 குக்குகள் பங்கேற்று உள்ளனர். 3 சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Vijay Television
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அவகேடோ பழத்தை வைத்து எல்லா கோமாளிகளும் ஒரு டிஷ் செய்து வருகின்றனர். அப்போது பாலா ரோஷிணியிடம் அவகேடோக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்க அவர் “தமிழ் அவகேடோ” என்று காமெடியாக கூறுகிறார். மேலும் புகழ் ரோஷிணியிடம் வந்து செல்லம் யார் போனாலும் நீ போக கூடாது என்று சொல்கிறார். இதே டயலாக்கை அம்மு அபிராமியிடம் வந்து கூற, அவர் புகழ் கன்னத்தில் பளார் பளார் என வைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the Cook With Comali Promo..