Cook-கள் உடன் International உணவு செய்ய களம் இறங்கிய பாட்டிகள்..! அலப்பறை கொடுக்கும் பாட்டிகள்.. ! போராடும் போட்டியாளர்கள்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நான்காவது சீசன் வரை முடிந்த இந்த போட்டி தற்போது 5வது சீசனை தொடங்கி மக்களின் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Cook-கள் உடன் International உணவு செய்ய களம் இறங்கிய பாட்டிகள்..! அலப்பறை கொடுக்கும் பாட்டிகள்.. ! போராடும் போட்டியாளர்கள்..! 1

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி மற்றும் ஜோயா எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி.. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், குக்குகளுக்கு இன்டெர்னஷனல் உணவு செய்யும் போட்டி நடைபெறுகிறது. இதில் அவர்களுக்கு உதவியாக பாட்டிகள் களம் இறங்கி உள்ளனர். கோமாளிகளுக்கு இணையாக பாட்டிகள் காமெடி செய்வது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்