6 வருட காதலியின் கழுத்தில் தாலி கட்டிய புகழ்.! மிக எளிமையாக நடந்த திருமணம்..!

வெளியிட்டது

குக் வித் கோமாளி புகழ் தனது ஆறு வருட காதலியான பென்சியாவை இன்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நடிகர் புகழ். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார். அப்போதெல்லாம் இவர் பெரும்பாலும் பெண் வேடத்திலேயே நடிப்பார். இவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது மறைந்த வடிவேல் பாலாஜி ஆவார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டு விடக்கூடாது என்பதற்காக பெண் வேடங்கள் என்றாலும் அதில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பெண் வேடம் இடுவதால் ஆரம்பத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் பல அவமானங்களை சந்தித்து வந்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

6 வருட காதலியின் கழுத்தில் தாலி கட்டிய புகழ்.! மிக எளிமையாக நடந்த திருமணம்..! 1

பின்னர் உலகம் முழுவதும் பார்க்கும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் மேலும் பிரபலமானார். இவரின் உடல் மொழி, முக பாவனைகள், நேரத்தில் இவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடிகள் போன்றவை சிரிப்பை வரவழைக்கும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிக பிடித்தமான நபராக மாறிப் போனார் புகழ். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜீத்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 16, 1947 என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவரை ஹீரோவாக கொண்டு மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று புகழ் மற்றும் பென்சியாவின் திருமணம் நடைபெற்றது. பெரிய ஆடம்பரம் எதுவும் இல்லாமல் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. பென்சியாவை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது புகழ் ஒருமுறை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, நடிகர் சசிகுமார் போன்ற திரையுலகினர் பலரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube video code embed credits: Kollywood Maths

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்