சீசன் 4-க்காக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குக் வித் கோமாளி செட்.! சுத்தி பாக்கலாம் வாங்க.!

வெளியிட்டது

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரிசமமாக கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சிக்கு தான். தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை நிறைவடைந்து, நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. நான்காவது சீசன் மிகப்பெரிய மாற்றத்துடன் நடைபெற இருக்கிறது. குறிப்பாக கோமாளிகள் பலரை மாற்றி இருக்கிறார்கள். அதே போல இந்த நிகழ்ச்சி நடக்கும் செட்டையும் மாற்றி இருக்கிறார்கள். அந்த செட்டை சுற்றி காண்பித்து தற்போது புகழ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சீசன் நான்குக்காக சில பல மாற்றங்களுடன் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது குக் வித் கோமாளியின் புது செட். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீசன் 4-க்காக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குக் வித் கோமாளி செட்.! சுத்தி பாக்கலாம் வாங்க.! 1

கடந்த மூன்று சீசன்களில் கோமாளிகளாக வந்த பலர் இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய கோமாளிகளாக ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, மௌன ராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா தாஹா, ஜி பி முத்து போன்ற பல புதியவர்களை களம் இறக்கி இருக்கிறது விஜய் டிவி. இவர்களுடன் சேர்த்து பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, மணிமேகலை, குரேஷி ஆகிய நால்வர் மட்டுமே இடம்பிடித்து இருக்கின்றனர். மேலும் கோமாளிகளில் முக்கிய பங்கு வகித்த சிவாங்கி இந்த முறை குக்காக களம் இறங்கி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இந்த முறை இடம்பெறவில்லை. இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் நேற்று வெளியான ப்ரோமோவில் புதிய குக்குகளை அறிமுகப்படுத்தி ப்ரோமோ வெளியாகியிருந்தது. இதுவரை மொத்தம் ஆறு குக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் 10 குக்குகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


அதில் மேகா படத்தில் நடித்த சிருஷ்ட்டி டாங்கே, பாக்கியலட்சுமி சீரியல் எழில், முத்து பட நடிகை விசித்ரா, நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட ஷெரின், வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன் போன்ற பலரை அறிமுகம் செய்திருந்தது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில குக்குகளும் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சீசன் நான்குக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள செட்டை சுற்றி காண்பித்து தற்போது புகழ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சமைக்கும் இடம், பான்ட்ரி ஏரியா என்று சொல்லப்படும் பொருட்கள் வைத்திருக்கும் இடங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் புதிதாக சில அறைகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் இந்த சீசன் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்