ராதிகா கம்பெனியில் கேன்டீன் ஆர்டர் பிடித்த பாக்கியா.! ராதிகா என்ன பண்ணாங்க தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமையல் ஆர்டர் எடுப்பதற்காக ஐடி கம்பெனி ஒன்றை நாடி இருக்கிறார் பாக்கியலட்சுமி. ஆனால் அந்த கம்பெனியில் தான், பாக்கியலெட்சுமியின் கணவரின் இரண்டாவது மனைவியான ராதிகாவும் வேலை பார்த்து வருகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கணவனால் கைவிடப்பட்டு, இரண்டாவது மனைவியை தேடி ஓடிவிட்டார் பாக்யாவின் கணவர் கோபி. இதனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தனி ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார் பாக்யா. தனது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு சமையல் ஆர்டரை எடுத்து அதை திறம்பட செய்தும் காட்டியிருந்தார் பாக்கியா. இதனால் அவருக்கு மேலும் மேலும் சமையல் ஆர்டர்கள் புதிதாக வரத் தொடங்கி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ராதிகா கம்பெனியில் கேன்டீன் ஆர்டர் பிடித்த பாக்கியா.! ராதிகா என்ன பண்ணாங்க தெரியுமா? 1

விளம்பரம்

கோபியில் இரண்டாவது திருமணத்தில் பாக்கியா சமைத்து இருந்தார். அந்த ஆர்டரை கொடுத்த திருமண மண்டபத்தின் உரிமையாளர், ராதிகா வேலை செய்யும் ஐடி கம்பெனிக்கு பாக்கியாவை அழைத்துச் செல்கிறார். அங்கே இந்த பெண்மணி நன்றாக சமைப்பார், அதைப்பற்றி நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம் என்று ஐடி கம்பெனி ஓனரிடம் திருமண மண்டபத்தின் ஓனர் உறுதியளிக்கிறார். எனவே கம்பெனி ஓனர், கேண்டீன் ஆர்டரை பாக்யாவிடம் அளிப்பதற்காக ஒத்துக் கொள்கிறார். அதற்கு முன்பாக சில கண்டிஷன்கள் போடுகிறார். ஆர்டரை எடுக்கும் முன்பு 7 லட்ச ரூபாய் டெபாசிட் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா தயங்குகிறார். அப்போது அவரது மருமகள் ஜெனி நாங்கள் கட்டி விடுகிறோம் என்று ஆர்டரை எடுத்துக் கொள்கிறார்கள்.

தொடர்புடையவை  வருண் அம்மா உயிரோடு இருக்கும் விஷயத்தை ஸ்ருதியிடம் போட்டு உடைத்த ருக்மணி.!

ராதிகா கம்பெனியில் கேன்டீன் ஆர்டர் பிடித்த பாக்கியா.! ராதிகா என்ன பண்ணாங்க தெரியுமா? 3

விளம்பரம்

வெளியே வந்த பின்பு ஜெனியும் பாக்யாவும் 7 லட்சம் ரூபாய் கேட்கிறார்களே என்று பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா அதை பார்த்து விடுகிறார்.நாம் வேலை செய்யும் கம்பெனியில் இவர்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மனதிற்குள் கேள்வி எழுப்புகிறார் ராதிகா. இதன் பின்னர் ராதிகாவும், பாக்யாவும் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பார்கள் என்று தெரிகிறது. பாக்யா கேண்டீன் கான்ட்ராக்டை எடுத்தப் பின்பு நாடகம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment