ரித்திகாவின் திருமண வரவேற்ப்பில் செம்ம ரகளை செய்த பாலா மற்றும் புகழ்.! வெளியான வீடியோ.!

தனது தோழி ரித்திகாவின் திருமண வரவேற்புக்கு சென்று பாலா அலப்பறை செய்துள்ள வீடியோவை பாலாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ராஜா ராணி தொடரில் கதாநாயகனின் தங்கையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரித்திகா. கோயமுத்தூரில் இருந்து நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்த இவருக்கு, திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சீசன் 2வில் இவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மூலமாக அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் எழிலுக்கு ஜோடியாக அம்ருதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரித்திகாவின் திருமண வரவேற்ப்பில் செம்ம ரகளை செய்த பாலா மற்றும் புகழ்.! வெளியான வீடியோ.! 1

விளம்பரம்

இந்த நிலையில் அவருக்கும் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு திரையுலகத்தை சேர்ந்த யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. வீட்டினர் முன்னிலையில் வைத்து மட்டுமே அவர்கள் தங்களது திருமணத்தை முடித்துக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று ரித்திகா மற்றும் வினு ஜோடியின் வரவேற்பு சென்னையில் நடந்தது. இதில் விஜய் டிவியில் நடித்துவரும் பலரும் கலந்து கொண்டனர். பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பலரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து புகழ் பாலா போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையவை  ஆஹா! ரெண்டு பேரும் செம்ம அழகா ஆடுறீங்களே..! அமீர் பாவனியை பாராட்டிய கமல் | BB Jodigal

ரித்திகாவின் திருமண வரவேற்ப்பில் செம்ம ரகளை செய்த பாலா மற்றும் புகழ்.! வெளியான வீடியோ.! 3
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது பாலா ரித்திகாவிடம் காதலிப்பது போன்ற சில சேட்டைகளை நடத்தி வந்தார். அதை பலரும் உண்மை என நம்பி இருந்தனர். ஆனால் ரித்திகா தற்போது வினுவை திருமணம் செய்து கொண்டதால் சிலர் ரித்திகாவை திட்டியும் வந்தனர். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நேற்று பாலா ரித்திகாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து புகழும் மேடையில் வைத்து சில சேட்டைகளை செய்தனர். அந்த வீடியோவை பாலாவே வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது தோழி ரித்திகாவிற்கு அவர் திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment