சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வரும் ஒரு பெயர் தான் கூல் சுரேஷ். இவர் புதுப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த படத்தில் நடித்தவர்கள் முதல் ஆளாக வந்து பார்க்கிறார்களோ இல்லையோ இவர் முதல் ஆளாக வந்து பார்த்துவிட்டு அந்த படத்தை பற்றிய திரை விமர்சனத்தை கூறுவார். படம் நன்றாக இல்லாவிட்டாலும் இவர் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கூறுவதால் ரசிகர்கள் இவரின் வீடியோக்களை விரும்பி பார்க்கத் தொடங்கினர். எப்பொழுதும் வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்று இவர் பேசும் டயலாக் மிகப் பிரபலம். ஆனால் கடந்த வாரம் வெளியான விருமன் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து இவர் செய்த காரியம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பின்னால் சுற்றி நின்று கைதட்டும் கூட்டம் கூட அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி சங்கரை பார்த்து, அதிதி உங்களை நான் காதலிக்கிறேன், எனக்கு அதிதியை திருமணம் செய்து தர வேண்டும், அதற்கு என்னுடைய மாமனார் சங்கர் உதவ வேண்டும், இல்லையென்றால் நான் முதலமைச்சர் வீட்டிற்கு முன்பாக சென்று தீக்குளிப்பேன், அல்லது காவல்துறை அலுவலகத்தில் சென்று புகார் அளிப்பேன் என்றெல்லாம் முகம் சுளிக்கும் வகையில் பேசினார். மேலும் டைரக்டர் சங்கர் சார் உங்கள் மகள் அதிதியை நான் காதலிக்கிறேன் என்று ஒரு பதாகையையும் அவர் தூக்கி காட்டி அதற்கு முத்தமும் கொடுத்தார். காமெடி என்ற பெயரில் இவர் பேசிய இந்த பேச்சு பலரையும் கடுப்பாக்கியது. எல்லை மீறி பேசுகிறாரோ என்று பலரும் கூல் சுரேஷை திட்டி தீர்க்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் கூல் சுரேஷ். அதில் தன்னுடன் பள்ளியில் தேன்மொழி என்ற ஒரு பெண் படித்ததாகவும், அவரை தான் காதலித்து வந்ததாகவும், அந்த அந்தப் பெண்ணை நினைவு படுத்தும் வகையில் விருமன் படத்தில் அதிதி தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் உணர்ச்சிவசப்பட்டு காதலிப்பதாக கூறிவிட்டதாகவும், இயக்குனர் சங்கர் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும், அதிதி தன்னுடைய தங்கை போன்றவர் என்றும் கூறி கூல் சுரேஷ் அந்தர் பல்டி அடித்துள்ளார். இனிமேலாவது வாய் இருக்கிறதே என்று வரம்பு மீறாமலும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருந்தால் சரிதான்.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Voice Of Madras