பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வேறு ஒரு போட்டியாளரை வெளியேற்றி பிக் பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கடைசி வரை இந்த போட்டியாளர் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்றைய எலிமினேஷனில் பாதிலேயே அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஏழு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். 6 சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

ஏழாவது சீசன் தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இறுதி கட்டங்களை நோக்கி இந்த நிகழ்ச்சியை நகர்ந்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் இந்த வாரம் விளையாடி வந்தனர். “மிட் வீக் எலிமினேஷன்” என்று சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பு அனன்யா ராவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி இருந்தனர். தொடர்ந்து இந்த வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், அது நிக்சனாக தான் இருக்கக்கூடும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் மனதளவில் மிகுந்த வீக்கான போட்டியாளராக கூல் சுரேஷ் இருந்து வருகிறார். அவர் ஒரு கட்டத்தில் சுவர் ஏறி குதித்து வெளியில் செல்லவும் முயற்சி செய்தார். பின்னர் சுவாரசியம் இல்லாமல் போட்டிகளில் கலந்து கொள்வது, ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவரை கடைசிவரை கொண்டு செல்ல முடியாது என்று முடிவு செய்த பிக் பாஸ் குழுவினர் இந்த வார எவிக்ஷனில் அவரை வெளியேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக எலிமினேஷனை ரத்து செய்து நிக்சனை பிக்பாஸ் குழுவினர் காப்பாற்றி இருந்தனர். இந்த வாரம் மீண்டும் நிக்சனுக்காக கூல் சுரேஷை பிக் பாஸில் இருந்து எலிமினேட் செய்திருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.