பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த கூல் சுரேஷ்..! வீடியோ இதோ.!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கூல் சுரேஷ் தற்போது முதல் முறையாக லைவ் வீடியோவுக்கு வந்திருக்கிறார். அவர் இந்த வீடியோவில் பல விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது, “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிரிமினலிடம் சென்று ட்ரைனிங் எடுத்துக் கொள்ள வேண்டும், அதேபோல ஆறு மாதம் ஒரு போலீசாரிடம் சென்று டிரைனிங் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் நம்ம நீடித்து விளையாட முடியும். பிக் பாஸ் வீட்டை பொறுத்தவரை, விஷ்ணு ஜால்ரா அடிக்க மாட்டார், உண்மையாக இருப்பார், தப்பை தட்டி கேட்பார், தினேஷும் மிக ஸ்ட்ரிக்ட் மற்றும் நேர்மையாக இருப்பார். அதேபோல் மணி நேர்மையாக விளையாடுவார். மீதம் இருக்கும் அனைவருமே பொய் சொல்லி விளையாடுபவர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த கூல் சுரேஷ்..! வீடியோ இதோ.! 1

மணி, விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ் ஆகிய ஐந்து பேருமே மிக ஸ்ட்ராங்கான ப்ளேயர்கள் இருந்தபோதிலும் மக்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், நீங்கள் யாரை வெற்றியாளர்களாக வருவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் நீடிக்க முடியும். துணிமணிகளை எல்லாம் வீசி எரிந்து ஒரு ஹாஸ்டல் போல அந்த வீட்டில் இருப்பார்கள். இதெல்லாம் பார்க்க சகிக்க முடியாதவர்களுக்கு அந்த வீட்டில் இருக்க முடியாது. மேலும் என்னுடைய குடும்பத்தை எனக்கு மிகவும் தேடியது. அவர்கள் நீங்கள் இன்னும் சில நாட்கள் இந்த வீட்டில் இருந்திருக்கலாம் என்று கூறினாலும், அவர்கள் மனதிற்குள் கவலை இருந்தது.

எனவே தான் நான் வெளியே வந்து விட்டேன். விசித்ரா, அர்ச்சனா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகிய ஐந்து பேருமே ஃபைனல் போட்டியாளர்களாக வருவார்கள். என் உடன்பிறவா தம்பி பிரதீப் உள்ளே இருந்திருந்தால் அவன் தான் கடைசியில் வெற்றியாளராக வந்திருப்பான். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இரண்டு மூன்று படங்களில் கமிட் ஆகி இருக்கிறேன். பிக்பாஸிற்கு இவ்வளவு வேல்யூ இருக்கும் என்று எனக்கு தெரியாது. நான் வெளியிலேயே பிரபலமாக இருந்தால் பிக்பாஸால் பெரிய மாற்றம் இருக்காது என நினைத்தேன். ஆனால் பிக் பாஸ்க்குப் பின்னர் எனக்கு பல படங்களில் நடிப்பு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உண்மை மற்றும் நேர்மையாக இருப்பவர்கள் அந்த வீட்டில் இருக்க முடியாது.

காசு பணத்திற்காக பொய், புரட்டு, மனசாட்சி இல்லாமல் மாற்றி மாற்றி பேசுபவர்கள் அந்த வீட்டில் வெற்றி பெற முடியும். ஐந்து பேராக சேர்ந்து கொண்டு ஓட்டு போட்டு, கேங்காக விளையாடுவாளர்கள். திறமைக்கு அங்கு மரியாதை இல்லை. எனவே தான் இந்த மாதிரி மொள்ளமாரித் தனம் பண்ணாமல் வெளியே போய் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று சொல்லி நான் வெளியே வந்து விட்டேன்” என்று கூறியிருந்தார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்