கூல் சுரேஷ் இந்த பெயரை கேட்காத இணையதளவாசிகளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமானவர்தான் இவர். இவர் ஒவ்வொரு புதிய படங்களின் போதும் அந்த படங்கள் குறித்து தனது விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். படம் வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அந்த படத்தை பற்றி இவர் கூறும் விமர்சனங்களை கேட்பதற்கே ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பெரும்பாலும் இவர் படத்தைப் பற்றி பாசிட்டிவ் கமெண்டுகளையே கொடுத்து வருகிறார். இவருடைய முழக்கம் வெந்து தணிந்தது காடு இந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்பதே ஆகும். இவர் டி ராஜேந்திரனின் முரட்டு பக்தர் ஆவார். டி ராஜேந்திரனின் பேட்டிகளில் அருகில் நின்று இவர் செய்யும் லூட்டிகள் பார்ப்பதற்கே மிக காமெடியாக இருக்கும். புது படங்கள் வெளியாகும் போது அந்த படத்தில் நடித்தவர்கள் அந்த படத்தை நேரில் வந்து பார்ப்பார்களோ இல்லையோ கூல் சுரேஷ் முதல் ஆளாக வந்து விடுவார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு அந்த படத்தில் இருக்கும் நிறைகளை மட்டுமே இவர் கூறி வருவதால் இவரது கமெண்ட்டுகளை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இன்று காலை விருமன் படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். ஹவுஸ் ஃபுல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது விருமன் படம். குறிப்பாக அதிதியின் நடிப்பை பலரும் பாராட்டு வருகின்றனர். அனைவரும் கூறும் போது, அதிதிக்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை, மதுரைக்கார பெண்ணாக நடிப்பில் அசத்தியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். படத்தில் நடிக்கும் மற்றவர்களை புகழ்ந்து பேசுவதை விட அதிதிக்கு அதிகமான பாராட்டு குவிந்து வருகிறது அவரது நடனமும், பாடலும், நடிப்பும் மிகப் பிரமாதமாக இருப்பதாகவும், அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விருமன் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த கூல் சுரேஷ், தனது விமர்சனங்களை வழக்கம் போல் முன்வைத்தார். அவர் ஆரம்பிக்கும் பொழுது வெந்து தணிந்தது காடு விருமனுக்கு வணக்கத்தை போடு என்றும், நானும் மதுரைக்காரன் தான் ஆனால் என்னை இந்த படத்தில் பயன்படுத்தாத முத்தையா தவறு செய்துவிட்டார் என்று,ம் என்னை பயன்படுத்தாமல் போனாலும் நான் இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும் தான் இந்த படம் பார்க்க வந்ததற்கு முக்கிய காரணம் அதிதி தான் என்றும், அவர் பெரிய ஆளாக வருவார் என்றும் கூறினார். மேலும் அதிதியை காதலிப்பதாகவும், இயக்குனர் ஷங்கர்தான் தன்னுடைய மாமனார் என்றும், ஐ லவ் யூ அதிதி என்றும் ஒரு லெட்டரை எழுதி காட்டினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video…