செல்வி மாதிரி இவளும் இந்த வீட்டில் ஒரு சமையல்காரி தான்..! வார்த்தைகளால் குத்தி கொல்லும் கோபி

விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இதில் கதாநாயகியாக வரும் பாக்யா தனது கணவன் கோபியின் கள்ளக்காதலை பற்றி சமீபத்தில் தெரிந்து கொண்டார். கோபியின் கள்ளக்காதலி தன்னுடைய தோழி ராதிகா என்பதை தெரிந்து கொண்ட பின்புதான் அவர் மிகவும் உடைந்து போனார். ஆனால் உண்மையில் ராதிகாவிற்கும் கோபியின் மனைவி பாக்யா தான் என்று தெரியாது. ஆனால் இருவரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றியதாக கருதி பாக்யா தன் கணவரிடம் மிகக் கடுமையாக சண்டையிடுகிறார். இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் முற்றி போகவே கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று விடுகிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வி மாதிரி இவளும் இந்த வீட்டில் ஒரு சமையல்காரி தான்..! வார்த்தைகளால் குத்தி கொல்லும் கோபி 1

விளம்பரம்

விவாகரத்து பெற்றுவிட்டு கோர்ட்டில் இருந்து வீட்டிற்கு வரும் அவரை கோபி வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறார். எனக்கு வேண்டுமென்றே விவாகரத்து கொடுத்த இவள், இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று சண்டையிடுகிறார். மேலும் இனியாவிடம் இவளுக்காக இனி நீ அழக்கூடாது என்றும் சொல்கிறார். இவள் இல்லை என்றால் இந்த வீட்டில் எதுவுமே நடந்து விடாதா? என்று கோபமான வார்த்தைகளில் கேள்வி கேட்கிறார். மேலும் அவர்கள் வீட்டில் சமையல் கார பெண்ணாக இருக்கும் செல்வியை கைகாட்டி இந்த செல்வி மாதிரி இவளும் இந்த வீட்டில் ஒரு சமையல்கார பெண்ணாகத்தான் இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அவர் கடுமையான வார்த்தைகளை கூறினார். இதனால் பாக்யா மேலும் மனமுடைந்து போகிறார்.

தொடர்புடையவை  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து திடீரென விலகிய நடிகை.! 4வது முறையாக மாறும் கதாபாத்திரம்.!

செல்வி மாதிரி இவளும் இந்த வீட்டில் ஒரு சமையல்காரி தான்..! வார்த்தைகளால் குத்தி கொல்லும் கோபி 3

விளம்பரம்

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் பாக்யா அடுத்த நொடியே தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய மசாலா கம்பெனிக்கு சென்று விடுகிறார். இதனால் இனியாவும் குடும்பத்தாரும் பாக்கியாவை தடுத்து நிறுத்தி இந்த வீட்டிலேயே இருக்க வைக்க எவ்வளவோ முயல்கிறார்கள். ஆனாலும் எதுவுமே பலன் அளிக்கவில்லை. இத்தனை நாட்கள் தனது முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு இருந்த கோபி, தற்போது தனது உண்மையான முகத்தை காட்டி வருகிறார். பாக்யாவிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள கோபி தனது வில்லன் முகத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் காட்டி இருக்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் எழிலை திட்டுகின்றனர். எழிலின் சப்போர்ட்டில் தான் பாக்யா இவ்வாறு நடந்து கொள்வதாகவும் எழிலை பார்த்து கூறுகின்றனர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத பாக்யா தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு மசாலா கம்பெனிக்கு கிளம்புகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment