எந்த ஒரு படம் வெளியானாலும் முதல் ஆளாக சென்று பேட்டி கொடுத்து வைரல் ஆகி வருபவர் நடிகர் கூல் சுரேஷ். அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களோ? இல்லையோ? இவர் முதல் ஆளாக நான்கு மணி ஷோவுக்கு சென்று விட்டு படத்தைப் பற்றி கமெண்ட்களை கொடுத்து வருகிறார். இவர் பெரும்பாலும் பாசிட்டிவ் கமெண்ட்களையே கொடுத்து வருவதால் இவரின் வீடியோவிற்காக பல ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் எல்லை மீறி இவர் செய்யும் சேட்டைகள் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. விருமன் படம் வெளியான போது, அந்த படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கரை பார்க்கும்போது, தனது பள்ளிக்கால காதலியான தேன்மொழியை நினைவுபடுத்துவதாக இருந்ததால் அவரை காதலிக்கிறேன் என்றும், இயக்குனர் சங்கர் அவர்களை மாமா என்றும் அவர் பேசியது பலரையும் எரிச்சல் படுத்தியது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பின்பு அடுத்தடுத்து பேட்டிகளில் அதிதி எனக்கு சகோதரி மாதிரி, காதலி இல்லை என்று பேட்டி அளித்து இயக்குனர் சங்கரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார் கூல் சுரேஷ். தொடர்ந்து வெளியாகும் படங்களின் பார்த்துவிட்டு வெளியில் வந்து இது போல பேட்டி அளிக்கிறார். நேற்று வெளியான லைகர் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் விஜய் தேவார கொண்டா எங்கடா இருக்க என்று திடீரென குரலை உயர்த்தி கத்தினார். பின்னர் படம் மிக நன்றாக இருக்கிறது விஜய் தேவார கொண்டாவின் சிக்ஸ் பேக்ஸ் உடலை பார்த்து இளைஞர்கள் அது போல் மாற வேண்டும் என்றும் அவர் பேசினார். மேலும் ரம்யா கிருஷ்ணனை ஒரு தாய் ஸ்தானத்தில் தான் காதலிப்பதாகவும் பேசினார். இன்றும் அருள்நிதியின் டைரி படம் வெளியான போது காலை ஷோக்கு போய்விட்டு அவர் சில விமர்சனங்களை கூறியிருக்கிறார்.
அப்போது அவர் ஒரு டைரியை எடுத்துக்கொண்டு கழுத்தில் பல மாலைகளை போட்டுக் கொண்டும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். மாலைகள் அனைத்தையும் நானே சென்று கோயம்பேட்டில் வாங்கவில்லை என்னுடைய ரசிகர்கள் வாங்கிக் கொண்டு வந்து எனக்கு போட்டார்கள் என்று கூல் சுரேஷ் கூறினார். இதுபோன்று அவர் தொடர்ந்து அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் காமெடியாக இருக்கும் அவரது சேட்டைகள் பல நேரங்களில் நம்ம எரிச்சல் அடையவும், முகம் சுளிக்கவும் வைக்கிறது அவர் டைரி படத்தைப் பற்றி கூறிய விமர்சனத்தை நீங்களும் பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். Watch the video below…