பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை மொத்தம் 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் முன் பின் தெரியாத ஒரு 16 நபர்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அதில் ஒவ்வொரு வார இறுதியிலும மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அவர்களை வெளியேற்றி, 100 நாட்கள் வரை யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களையும் மக்கள் வாக்குகளின் அடிப்படையிலேயே வெற்றியாளர்களாக அறிவிப்பர். இந்த நிகழ்ச்சி தமிழில் மொத்தம் ஐந்து சீசன்களை கடந்து விட்டது. தற்போது ஆறாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எப்போதும் பெரிய இடத்தை அடைவது உண்டு. அங்கு கேரியரை தொடங்கிய பலரும் தற்போது வெள்ளித்திரையில் பெரிய படங்களில் கமிட் ஆகிய நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 எப்போது துவங்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அக்டோபர் இரண்டாம் தேதி பிரம்மாண்டமாக துவங்க உள்ளது என்றும் இதை கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்றும் சில தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க நேற்று முதல் முறையாக பிக்பாஸ் சீசன் 6 குறித்த ஒரு ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில் மக்களில் இருந்து ஒரு நபரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்புவதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது சீசன் 6 கலந்து கொள்ளும் நபர்கள் குறித்து தற்போது ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதில் குக் வித் கோமாளிலிருந்து ரக்ஷன் மற்றும் தர்ஷா குப்தா, பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ராஜலட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, சர்ச்சைக்குரிய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, பாலிமர் தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகிய 10 பேரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
