இரண்டாவது பைனலிஸ்ட் யாரு? பரபரப்பின் உச்சத்தில் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அரை இறுதி சுற்றுக்காக தற்போது குக்குகள் விதவிதமான உணவுகளை சமைத்து நடுவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று பல ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இது தற்போது மூன்று சீசனை முடித்து நான்காவது சீசனையும் விரைவில் முடிக்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீசனின் அரையிறுதி சுற்று நடைபெறுகிறது. விசித்ரா ஏற்கனவே முதல் பைனலிஸ்டாக தேர்வாகி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது பைனலிஸ்டை தேர்வு செய்வதற்காக அரையிறுதி சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சிவாங்கி, கிரண், மைம் கோபி, சிருஷ்டி என்று மொத்தம் நான்கு பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பைனலிஸ்ட் யாரு? பரபரப்பின் உச்சத்தில் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ 1

நான்கு பேர் தற்போது போட்டி போடும் நிலையில் இதிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது பைனலிஸ்ட் ஆக மற்றொருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 5 அல்லது 6 போட்டியாளர்டன் பைனல்ஸ் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, வைல்ட் கார்டு என்ட்ரிக்கான ப்ரோமோ சூட்டிங் நிறைவடைந்து இருக்கிறது. இதில் ஆண்ட்ரியன் வைல்டு கார்டு என்ட்ரியாக தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அரையிறுதி சுற்றுக்கு கடினமான உணவுகளை சமைக்க சொல்லி நடுவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். சுண்டைக்காய், தேயிலை, கல்லீரல், கூனைப்பூ, மீன் முட்டை போன்ற கடினமான உணவுகளை குக்குகளுக்கு சமைக்க சொல்லி கொடுத்திருந்தனர்.


அதை அனைத்தையும் வைத்து சிறப்பாக குக்குள் சமைத்து நடுவர்களை அசத்தியிருக்கின்றனர். விதவிதமான உணவுகளை சமைத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்