அண்ணே எப்படின்னே அத பண்ணீங்க? வந்த உடனே ஜிபி முத்துவை கலாய்த்த பிரியங்கா.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் கடைசி ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது இறுதிச் சுற்றுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வரும் நிலையில், பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் இணைந்து தற்போது சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர். இதில் பிரியங்கா “சமையல் சமையல்” என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முன்னோடி நிகழ்ச்சியாக இருந்த ஒரு நிகழ்ச்சியிலேயே சமையலை செய்து அதில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தார். அதனால் அவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே செட்டுக்கு திரும்புவது மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர் ஜி பி முத்துவையும் பாராட்டி இருந்தார். அதே சமயம் சைட் கேப்பில் மாகாபாவும் ஜி பி முத்துவை கலாய்த்து இருந்தார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணே எப்படின்னே அத பண்ணீங்க? வந்த உடனே ஜிபி முத்துவை கலாய்த்த பிரியங்கா.! 1

விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மட்டுமல்லாது, சின்னத்திரை உலகில் பலரின் மனம் கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இது தற்போது நான்காவது சீசனையும் விரைவில் முடிக்க இருக்கிறது. நான்காவது சீசன் முடிந்த உடனேயே பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் இறுதிச்சுற்றுக்கு ஆறு பேர் தகுதியாகி இருக்கின்றனர். அதில் மைம் கோபி, சிவாங்கி, சிருஷ்டி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியின் என ஆறு பேர் மோத இருக்கின்றனர். இவர்களில் மைம் கோபி முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சிருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்ராவும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சீசன் முடிவடைய இருக்கும் நிலையில் கடைசி ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பல வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டேவும், மாகாபா ஆனந்தும் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோ வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்