சீசன் 3 Vs சீசன் 4..! குக் வித் கோமாளியில் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியானது..!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த சீசன் 3 யில் இருந்து ஸ்ருதிஹா, அம்மு அபிராமி, தர்ஷன், ரோஷினி ஹரிப்பிரியன், முத்துக்குமார் போன்றவர்கள் இந்த சீசன் போட்டியாளர்களுடன் மோதும் விதமாக தற்போது வந்திருக்கின்றனர். இதனால் இந்த வாரம் காமெடி மற்றும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸிற்கு நிகரான ஒரு டாப் ரியாலிட்டி ஷோவாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். உலகத்தின் எந்த மூலையிலும் வாழும் தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தற்போது வரை டாப் 5 குக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த சீசன் நடைபெற்று வருகிறது. விரைவில் குக் வித் கோமாளி முடிவடைந்து பிக் பாஸ் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீசன் 3 Vs சீசன் 4..! குக் வித் கோமாளியில் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியானது..! 1
இந்த சீசனில் ஆரம்பத்தில் ஷெரின், கிஷோர் ராஜ்குமார், ராஜ் ஐயப்பன், விஜே விஷால், மதுரை காளையன், மைம் கோபி, சிவாங்கி, விசித்ரா, ஆண்ட்ரியன், சிருஷ்டி உள்ளிட்ட 10 குக்குகள் கலந்து கொண்டனர். பின்னர் கஜேஷ் மற்றும் கிரண் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்திருந்தனர். தற்போது பல குக்குகள் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு முதல் ஐந்து இடத்திற்கு குக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிருஷ்டி, சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, கிரண் ஆகிய ஐந்து பேர் டாப் 5 லிஸ்டில் வந்துள்ளனர். கடந்த வாரம் நடந்த ஆண்ட்ரியனின் எலிமினேஷன் நியாயமான முறையில் நடக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இருந்தபோதிலும் தற்போது நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சீசன் 3-ல் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் வந்துள்ளனர்.


அம்மு அபிராமி, முத்துக்குமார், தர்ஷன், ஸ்ருதிஹா, ரோஷினி ஹரிப்பிரியன் போன்ற 5 குக்குகள் வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சீசன் 4-ல் டாப் 5 லிஸ்டில் வந்திருக்கும் சிருஷ்டி, சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, கிரண் ஆகியோர் மோத இருக்கின்றனர். இது செலிப்ரேஷன் ரவுண்டாக நடத்தப்பட இருக்கிறது. அதற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் இந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்