பல லட்சம் மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. ப்ரோமோவில் பேசிய கமலஹாசன் இந்த முறை ஒரு வீடல்ல இரண்டு வீடு என்றும் 20 போட்டியாளர்கள் என்றும் அதிரடி சஸ்பென்ஸுடன் தொடங்கி வைத்திருந்தார். எனவே இந்த முறை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருபது போட்டியாளர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே பலமாக எழுந்திருக்கிறது. விஜய் டிவியின் நடிகர் நடிகைகளுக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும், அதன் பின்னர் தான் வேறு ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பிக்பாஸின் எழுதப்படாத வழக்கமாக இருக்கிறது.

ஆறு சீசன்களுமே இதுவரை அப்படித்தான் நடந்து முடிந்துள்ளது. கடந்த முறை புது முயற்சியாக அரசியல்வாதி விக்ரமனை களம் இறக்கி அதிர்ச்சி கொடுத்திருந்தனர் பிக் பாஸ் குழுவினர். மேலும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர், திருநங்கை ஒருவர் என்று பல மாறுதல்களை செய்து வருகிறது பிக்பாஸ் டீம். இதனால் இந்த முறை எப்படி போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித கருத்துக்கள் உலவி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா பிக் பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 21 வயதான ரவீனா ராட்சசன் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கோமாளியாக பங்கெடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram