தலைகுப்புற விழுந்த பரத்..! தாறுமாறாக விழும் குக்குகள்.! இந்த வாரம் செம அலப்பறை இருக்கு.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறுவர்கள் விளையாடும் ஒரு பொம்மை போன்ற அமைப்பை நடுவர்கள் தடையாக கொடுத்திருக்கின்றனர். சமையலுக்கு நடுவே அதில் குதித்து விளையாட வரும் குக்குகள் மற்றும் கோமாளிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சமையலுடன் நடக்கும் காமெடி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கிலும் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றர். மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருக்க, வழக்கம் போல ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது முன்னாள் கோமாளியாக இருந்த மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைகுப்புற விழுந்த பரத்..! தாறுமாறாக விழும் குக்குகள்.! இந்த வாரம் செம அலப்பறை இருக்கு.! 1

சீசன் 4 மொத்தம் பத்து குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. கிஷோர் ராஜ்குமார், விஜே விஷால், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், ஷெரின், ஆண்ட்ரியன், விசித்ரா, மைம் கோபி, சிவாங்கி, சிருஷ்டி என மொத்தம் பத்து பேர் போட்டியாளர்களாக இருந்தனர். இதில் கிஷோர், விஷால், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், ஷெரின், ஆண்ட்ரியன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். இதற்கிடையில் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் குக் வித் கோமாளி செட்டை அமைத்த கிரண் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தனர். இதில் கஜேஷும் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறார். தற்போது விசித்ரா முதல் ஃபைனலிஸ்காக இந்த சீசனில் வெற்றி பெற, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி மற்றும் கிரண் ஆகியோர் டாப் 5-ல் இருந்து வருகின்றனர். தற்போது இருக்கும் போட்டியாளர்களுடன் மோதுவதற்காக பிக்பாஸில் இருந்து 5 பேர் வந்துள்ளனர். பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜனனி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய ஐந்து பேர் வந்துள்ளனர்.

இந்த ஐந்து பேரும் தற்போது டாப் 5 போட்டியாளர்களாக இருக்கும் குக்குகளுடன் மோத இருக்கின்றனர். அந்த ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வந்த நிலையில் தற்போது நடுவர்கள் சமையலுக்கு நடுவே கொடுக்கப்படும் தடையாக பார்க்குக்களில் குழந்தைகள் விளையாடும் பொம்மை போன்ற ஒரு அமைப்பை வைத்திருக்கின்றனர். அதில் குக்குகளும் கோமாளிகளும் குதித்து விளையாடும் போது அவர்களுக்கு பலமாக அடி படுகிறது. காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்