விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.
நடிகை ஷகீலாவிற்கு அறிமுகம் தேவையில்லை. 1990களில் மிகவும் பிரபலமான நடிகையாக தென்னிந்தியாவில் வளம் வந்தார். மலையாளத்தில் குறிப்பாக இவருடைய ஆபாச படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக இப்படியான வேலைகளில் செய்து வந்த நடிகர் ஷகீலா. சில ஆண்டுகள் முன்பு அவ்வாறான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முக்கிய சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை இரண்டாவது சீசனில் களமிறங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே இவர் மேல் இருந்த தவறான எண்ணங்கள் மாறி மக்களுக்கு இவர் மேல் நல்ல அபிப்ராயயமும், முன்னர் இருந்தததை விட நிறைய ரசிகர் கூட்டமும், முன்னர் இவர் சந்தித்த சம்பவங்கள் மக்களை சோகத்திலும் ஆழ்த்தியது. இருப்பினும் சீசன் 2’வில் இவரே மக்களின் மனம் கவர்ந்த மிக முக்கிய போட்டியாளர். வென்றது கனியாக இருந்தாலும் மக்களின் பிடித்தமான போட்டியாளராக மாறிப்போனார் ஷகீலா.
இப்பொது இவர் ஒளிபரப்பாகி வரும் சீசன் 3’இல் இவர் சிறப்பு போட்டியாளராக இந்த வாரம் களமிறங்கியுள்ளார். அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த போது, நடிகை ஷகீலா ஹாயாக உட்கார்ந்து இருந்தார். இதனை கண்ட பாலா, “எதோ, மால்ல மீன் தொட்டிக்குள்ள கால் விட்டுணு உக்கார்ந்து இருக்குற மாதிரி உட்கார்ந்ததுனு இருகாங்க பாருங்க” என கலாய்த்து தள்ளினார்.
வழக்கம் போலவே பாலாவும், ஷகிலாவும் சென்ற சீசனில் செய்த காமெடியில் கலக்கியது போலவே இந்த வார எபிசோடிலும் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார். அதில் ஒரு சில கிளிப்பிங்கை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விடியோவை நீங்களும் காண…
Video Courtesy – VijayTelevision