“என்னது ஜெயில்’லா”!! உங்க சவுகாசமே வேணாம் போங்கய்யா!! டாஸ்கை கேட்டு வாயை பிளத்த மணிமேகலை!! அடுத்தடுத்த கண்டிஷன் சொன்ன வெங்கடேஷ் பட்!!

வெளியிட்டது

சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்னது ஜெயில்'லா"!! உங்க சவுகாசமே வேணாம் போங்கய்யா!! டாஸ்கை கேட்டு வாயை பிளத்த மணிமேகலை!! அடுத்தடுத்த கண்டிஷன் சொன்ன வெங்கடேஷ் பட்!! 1

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.

இந்த வார டாஸ்காக குக்குகளை ஜெயிலில்  வைத்துவிட்டு கோமாளிகள் சமைக்க வேண்டும் என்பதே இந்த வார டாஸ்க். சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜி இதில் கலந்து கொண்டுள்ளார். இந்த டாஸ்க் குறித்து பட் சொன்னதுமே மணிமேகலை எது ஜெயில்லா இந்த ஆட்டத்துக்கு நான் வரல என கூறியபோதுதான், இது உங்களுக்கு இல்லை, குக்குகளுக்கு என வெங்கடேஷ் பட் கூறினார். ஜெயிலில் இருக்கும் குக் வெளியிலிருக்கும் கோமாளிகளை வேலை வாங்கி எவ்வாறு ஜெயிக்க போகிறார்கள் என்பதே இந்த வர கலகலப்பான டாஸ்க்.

நடிகர், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் “வீட்ல விஷேசங்க” படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி என பலர் நடித்துள்ள இந்த படம் ஹிந்தியில் வெளியான “பதாய் ஹோ” படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக். 60 வயதை நெருங்கியுள்ள ஒரு தந்தையும் , தாயும், கருத்தரிக்க திருமண வயதில் இருக்கும் பாலாஜி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்குறார் என்பதே படத்தின் கலகலப்பான கதைக்களம்.

Video Courtesy – VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்