Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் குக் வித் கோமாளி கெமி..! அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்..!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரையும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவாக்கி வருகிறது. புகழ் மற்றும் பாலா எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பிரபலமாகியவர்கள் தான். அப்படி பலரையும் கைதூக்கி விட்டு இருக்கிறது இந்த நிகழ்ச்சி. தற்போது நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, கெமி ஆகியோர் வருகை தந்து உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குக் வித் கோமாளி கெமி..! அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்..! 1

இந்த தொடரில் கோமாளியாக பல கெட்டப்புகளில் வந்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் கெமி. மிர்ச்சி ரேடியோவில் வேலை செய்யும் கெமி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார். ப்ரோமோவை பார்க்கும் நிகழ்ச்சி ரசிகர்கள் பலரும் கெமி வரவில்லையா என்று தான் தங்களது கேள்விகளை முதலில் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கெமி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். படம் முழுக்க வரும் முக்கிய ரோலை இயக்குனர் கெமிக்கு கொடுத்து உள்ளாராம். இதனை கெமி நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்து இருக்கிறார். இதனால் கேமியின் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்