காதல் மனைவி சயீஷாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவருக்கு தற்போது படங்கள் சரியான வரவேற்பினை பெறவில்லை. இதனால் படங்களின் கதைகளை கேட்டு நடித்து வருகிறார். தற்போது இவருக்கு அடுத்ததாக சந்தானம் உடன் தில்லுக்கு துட்டு படம் , மற்றும் சார்பட்டா பரம்பரை 2 படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் மனைவி சயீஷாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

தொடர்ந்து தனது வெற்றிக்காக ஆர்யா அசராமல் போராடி வருகிறார். இவர் நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கஜினிகாந்த் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த நிலையில் , இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவருக்கு அழகிய மகள் ஒருவர் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சயீஷா படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

காதல் மனைவி சயீஷாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் மனைவி சயீஷாவின் பிறந்தநாளை நடிகர் ஆர்யா கொண்டாடி உள்ளார். மேலும் மனைவியை இரவு விருந்துக்கு ஹோட்டல் அழைத்து சென்று உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment