சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.
இத டாஸ்க்காக குக்குகள் கையில் கோமாளிகள் படம் பொறித்த அட்டை டப்பாவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்க, அதற்குள் கோமாளிகள் சென்று கொடுக்கப்பட்ட பொருளைகளை அனைத்தையும் எடுத்து வர வேண்டும். இது முடிவதற்குள்ளாகவே கோமாளிகள் குக்குகள் அனைவரும் மொத்த அட்டை பெட்டிகளை கீழே போட்டுவிட்டு தடுமாறி நின்று கொண்டிருந்தனர்.
அதே போல இந்த வர சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கியுள்ள “இரவின் நிழல்” படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். படத்தில் ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி சரத்குமார், பிரிகிடா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் பார்த்திபன் ஒரு குட்டி கதை, கூற சுத்தமாக புரியாமல் பரத் தவிக்க, இயக்குனர் பார்த்திபனே கடுப்பாகி அங்கிருந்து சென்று விட்டார். அந்த காட்சியை நீங்களும் காண…..
Video Courtesy – VijayTelevision