தங்களை போலவே கெட்டப் போட்டு வந்தது குரேஷி புகழை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ஸ்ருஷ்டி, ஷெரின் .!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது. முதல் மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சமையல் போட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சேட்டைகள் நிறைந்த கோமாளி ஒருவரை வைத்துக்கொண்டு குக்குகள் கொடுக்கும் டாஸ்க்கை எப்படி சமைக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு முக்கிய காரணம். கோமாளிகள் செய்யும் சேட்டைகள், நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகள் இதையெல்லாம் சமாளித்து குக்குகள் எப்படி கொடுக்கும் டாஸ்க் உணவை சமைத்துக் கொடுக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றியாளர்களாக வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்களை போலவே கெட்டப் போட்டு வந்தது குரேஷி புகழை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ஸ்ருஷ்டி, ஷெரின் .! 1

இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பல கோமாளிகள் மாற்றப்பட்டு புதிதாக கோமாளிகள் இந்த சீசனில் இறக்கப்பட்டிருந்தனர். சுனிதா, மணிமேகலை, புகழ், குரேஷி ஆகிய நான்கு பழைய கோமாளிகள் இருந்த நிலையில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். சிவாங்கி குக்காக வந்த நிலையில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, தங்கதுரை போன்ற புதிய கோமாளிகள் பலர் உள்ளே களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். ஆரம்பத்தில் பத்து குக்குகளுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இருந்தது. இயக்குனர் கிஷோர், நடிகை ஸ்ருஷ்டி, சிவாங்கி, ஷெரின், ராஜ் ஐயப்பன், பாக்கியலட்சுமி சீரியல் விஜே விஷால், விசித்ரா, மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் கோபி போன்றவர்கள் குக்குகளாக கலக்கி கொண்டிருக்கின்றனர். இதில் கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பா ஆகிய மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் குக்குகள் போலவே கோமாளிகள் கெட்டப்புகளை போட்டு வந்துள்ளனர். அதில் குரேஷி சிருஷ்டி போலவும், புகழ் ஷெரின் போலவும், ரவீனா விசித்ரா போலவும், மோனிஷா சிவாங்கி போலவும், ஜி பி முத்து காளையன் போலவும் வேடமணிந்து வந்துள்ளனர். இந்த வாரம் 1947 படத்திற்க்காக கெளதம் கார்த்திக் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். மேலும் பலூடா ஸ்பூனை கையில் மாட்டிக்கொண்டு குக்குகள் மற்றும் கோமாளிகள் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. செம காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்