சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கதிர், ஆதி குணசேகரன் ஆகியோர் எஸ்.கே.ஆர் குடும்பத்திற்கு எதிராக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எஸ்.கே.ஆர் அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் கிடையாது என்று கூற ஆதி குணசேகரன் திருதிருவென முழிக்கிறார். அதைக்கேட்ட கதிர் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காரில் குண்டு வெடித்து அப்பத்தா இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்பத்தா இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படியான திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் எஸ்.கே.ஆர் மற்றும் அவரது தம்பிகளும் ஆதி குணசேகரனும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எஸ்.கே.ஆர் அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் கிடையாது என்று சொல்ல கதிர் அதிர்ச்சியில் உறைகிறார். ஆதி குணசேகரன் திருதிருவென முழிக்கிறார்.

மற்றொருபுறம் ஈஸ்வரிக்கு வேலை கிடைப்பதற்கு ஜீவானந்தம் மிகவும் முயற்சி செய்ததாக ஈஸ்வரிடம் ஒருவர் வந்து கூறுகிறார். இதற்கிடையே சக்தியும் ஜனனியும் வக்கீலை சென்று பார்த்து ஜீவானந்தத்தை ஜாமினில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது வக்கீல் அதற்கு வேலையே இல்லை என்று சொல்லி, சில தகவல்களை கூறுகிறார். அதைக்கேட்ட ஜனனியும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV